மிரட்டலான டைட்டில்.. அடுத்த படத்தில் இயக்குனராக களமிறங்கும் எஸ் ஜே சூர்யா - அட்டகாசமான அப்டேட்டுடன் Exclusive Interview உள்ளே..

இயக்குனராக மீண்டும் களமிறங்கும் எஸ் ஜே சூர்யா வீடியோ உள்ளே - SJ Suryah about his next directorial project | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமாகி மிக முக்கிய ஸ்டார்களை இயக்கி காலத்தினால் அழியாத ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை திறமையான இயக்குனராக நிலை நிறுத்தி கொண்டவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா, இயக்கம் மட்டுமல்லாமல் ஹீரோவாக களம் இறங்கி இன்று வரை பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதன்படி விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் அதே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் உருவாகும் கேம் செஞ்சர்ஸ் திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் ஜூன் 16 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பொம்மை’ இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.  தொடர்ந்து தனித்துவமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக எஸ் ஜே சூர்யா விற்கு வாழ்த்து தெரிவிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் காணொளி மூலம் செய்தியை பகிர்ந்தார். அதில். "எஸ்.ஜே.சூர்யா ரொம்ப உணர்வு பூர்வமான நடிகர். நம்ம எழுதுறதவிட கூடுதலாக கொடுப்பார். அவர் ஒரு இயக்குனரா பல முயற்சிகளை எளிதாக கொடுத்திருக்கிறார்.  சீக்கிரம் ஒரு படம் இயக்குங்க.  அவரிடம் ஒரு தரமான கதை இருக்கு.. அந்த படம் பேர் 'கில்லர்'. அதை சீக்கிரம் தொடங்குங்க.." என்றார்.

மேலும் அவர் பகிர்ந்ததில் எஸ்ஜே சூர்யா அவர்களின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் டைட்டிலும் குறித்து பேசினார். இது குறித்து எஸ் ஜே சூர்யா அவர்களிடம் கேட்கையில்,

"இன்னிக்கு நான் ஒரு நல்ல நடிகன்னு பேர் எடுத்த காரணம் கார்த்திக் சுப்பராஜ் தான்.‌ என்னை வைத்து படம் எடுத்த பெரிய இயக்குனர் இவர்தான். இவரால் தான் மற்ற பெரிய இயக்குனர் என்னை நடிக்க கேட்டனர்." என்றார் எஸ் ஜே சூர்யா. மேலும் தொடர்ந்து "ஒரு தமிழன் உலகம் முழுவதும் பேர் எடுக்கனும் என்னுடைய லச்சியம். அதன்படி ஏஆர் ரஹ்மான், ரஜினி சார்கமல் சார், சங்கர் சார், தனுஷ் சார்.. அதுபோல நம்முடைய திறமையை வேற்று மாநிலத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒன்று இருக்கு.. அது நம்மளும் செய்யனும்.  அதற்கு முதல் படி தான் 'கில்லர்'

ஒருவேளை, ஜிகர்தண்டா 2 திரைப்படம் உருவாகிட்டு இருக்க விதமே என்ன அந்த ரேஞ்ச் கூப்டு போயிடும் னு நான் நினைக்குறேன். அதன்பின் அடுத்தகட்டத்திற்கு கில்லர் கொண்டு போகலாம். " என்றார் எஸ் ஜே சூர்யா.

மேலும் எஸ்ஜே சூர்யா அவர்கள் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

“கோவில் இடிச்சதும் படம் எடுக்கவே முடியல..” வீரன் உருவான விதம் குறித்து படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“கோவில் இடிச்சதும் படம் எடுக்கவே முடியல..” வீரன் உருவான விதம் குறித்து படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரல் வீடியோ உள்ளே..

சினிமா

"அட அறிவு கெட்ட முட்ட..!"- மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஆயுத எழுத்து பட அனுபவத்தை பகிர்ந்த சித்தார்த்! கலகலப்பான வீடியோ இதோ

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..