'உதயநிதி ஸ்டாலின் படங்களிலேயே மாமன்னன் தான் உச்சம்!'- அதிரடி வசூல் சாதனை... விவரம் உள்ளே!

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட புது வசூல் சாதனை,maamannan is highest grossing film for udhayanidhi stalin in uk | Galatta

தனது கடைசி திரைப்படமாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் தான் அவரது திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டுக்கான மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிய திரைப்படம் தான் மாமன்னன். தொடர்ச்சியாக தனது திரைப்படங்களின் வாயிலாக சமூக நீதியை பேசி வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக இயக்கிய மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படம். தற்சமயம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து இருப்பதால் ஒட்டுமொத்தமாக தற்போது சினிமாவை விட்டு விலக முடிவெடுத்திருக்கிறார்.

நீண்ட காலமாக தான் பேச நினைத்த ஒரு சமூக நீதி பிரச்சனையை தரமான அரசியல் படமாக திரை வடிவமாக இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னனை உருவாக்கி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகர்களாக நடித்துள்ள மாமன்னன் படத்தில் புரட்சிகரமான கதையின் தாக்கியதாக கீர்த்தி சுரேஷும் மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை அமைத்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படத்தின் ரிலீஸுக்கு முன்பே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் போலீசுக்கு பிறகு படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான மாமன்னன் திரைப்படம் தற்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த சமூகநீதி திரைப்படமாக விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் மாமன்னன் திரைப்படம் தற்போது வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. முன்னதாக மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படங்களிலேயே மாமன்னன் திரைப்படம் தான் அனைத்து பகுதிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் UK மற்றும் அயர்லாந்து நாடுகளில் ரிலீஸான மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் திரைப்படங்களிலேயே இதுவரை எந்த திரைப்படம் படைத்திடாத பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்திருப்பதாக UK மற்றும் அயர்லாந்தில் மாமன்னன் படத்தை வெளியிட்டுள்ள அகிம்சா என்ட்ரடெய்ன்மென்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

New milestone for @Udhaystalin with #MAAMANNAN crossing £40k at the UK & Ireland box office - his highest grossing film till date! 💯@vithurs_ @deepa_iyer_ @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil #AhimsaEntertainment @cineworld @ODEONCinemas pic.twitter.com/n3cn2dfviE

— Ahimsa Entertainment (@ahimsafilms) July 3, 2023

சூர்யா - ஜோதிகாவின் ஐரோப்பா ட்ரிப்... மகள் - மகனோடு கோடை விடுமுறை கொண்டாட்டம்! வைரலாகும் VACATION வீடியோ இதோ
சினிமா

சூர்யா - ஜோதிகாவின் ஐரோப்பா ட்ரிப்... மகள் - மகனோடு கோடை விடுமுறை கொண்டாட்டம்! வைரலாகும் VACATION வீடியோ இதோ

காமெடி சரவெடியாக வரும் அனுஷ்காவின் கம் பேக் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி… ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

காமெடி சரவெடியாக வரும் அனுஷ்காவின் கம் பேக் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி… ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்