இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திர நாயகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பின் தற்போது ஜெயலிர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அந்த வகையில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது.லால் சலாம் திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்தும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் லால் சலாம் படத்திற்கான இசை பணிகளை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஏ.ஆர்.ரகுமான் ஹார்மோனிய பெட்டியுடன் பணியாற்றும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

Jamming with the most promising female Director @ash_rajinikanth for #lalsalaam in mumbai.#தமிழ் pic.twitter.com/Qg83tefxxv

— A.R.Rahman (@arrahman) November 25, 2022