என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ராஜ்கிரண். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அரண்மனைக்கிளி திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்த ராஜ்கிரண் அவர்கள் தொடர்ந்து எல்லாமே என் ராசாதான் திரைப்படத்தையும் இயக்கி நடித்தார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களையும் ஏற்று மிக சிறப்பாக நடிக்கும் ராஜ்கிரண் அவர்கள் முரளியின் வீரத்தாலாட்டு, சூர்யாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி&தவமாய் தவமிருந்து, சிலம்பரசனின் கோவில், அஜித் குமாரின் கிரீடம், லாரன்ஸின் முனி, தளபதி விஜயின் காவலன், தனுஷின் வேங்கை & பா.பாண்டி, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், கார்த்தியின் கொம்பன் மற்றும் விருமன் உள்ளிட்ட படங்களில் மிரட்டலாக நடித்திருந்தார்.

இந்த வரிசையில் அடுத்ததாக களவாணி & வாகை சூடவா படங்களின் இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து பட்டத்து அரசன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார். லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் ராஜ்கிரண் தமிழ் திரையுலகிலேயே முதல்முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நபர் தான் தான் என தெரிவித்துள்ளார். மேலும் “சென்னைக்கு 16 வயதில் வேலை தேடி வந்த பொழுது 4 ரூபாய் 50 காசுகள் எனது முதல் சம்பளமாக இருந்தது. அதன் பிறகு 150 ரூபாய் சம்பளமாக இருந்தது. தற்போது ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் எனது சம்பளம் என நிர்ணயத்துள்ளனர்” என ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ராஜ்கிரண் பேசிய அந்த முழு வீடியோ இதோ…