தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக நயன்தாரா நடித்திருக்கும் கனெக்ட் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீண்டகாலமாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த (2022) ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார், நடிகை நயன்தாரா குறித்து பெருமிதமாக பேசும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நயன்தாராவின் வீட்டில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் பணியாளர் ஒருவர் ஒருநாள் சோகமாக இருந்துள்ளார். அவரது அந்த கவலைக்கு காரணம் என்ன என நயன்தாரா கேட்டறிய அவருக்கு நான்கு லட்ச ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்தது. அடுத்த நிமிடமே உடனடியாக அவருக்கு 4 லட்ச ரூபாயை கொடுத்து அவரது கவலையை தீர்த்துள்ளார் நயன்தாரா. இவ்வாறாக நடிகை நயன்தாரா குறித்து பல விஷயங்களை பெருமிதமாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…