இந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடர்ந்து பல மொழிகளில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகும் புதிய ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் என விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து வைக்க காத்திருக்கின்றன.

மேலும் மொழிகளை கடந்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து காந்தி டாக்ஸ் என்னும் மௌன திரைப்படமும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காக்காமுட்டை & ஆண்டவன் கட்டளை திரைப்படங்களின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் கடைசி விவசாயி.

ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின் கடைசி விவசாயி திரைப்படம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ட்ரைபல் ஆர்ட்ஸ் புரோடக்சன்ஸ் மற்றும் விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் கடைசி விவசாயி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் & ரிசார்ட் ஹார்வி இணைந்து இசையமைக்க இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நல்லாண்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…