Pan World பாட்டு...தளபதி போன் கால்...ரகளையான பீஸ்ட் முதல் பாடல் ப்ரோமோ இதோ !
By Aravind Selvam | Galatta | February 07, 2022 18:21 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது,விஜய் பூஜா ஹெக்டே போன்றோர் தங்கள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டனர்.சில பேட்ச் காட்சிகளின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.டாக்டர் படத்தினை போல சிவகார்த்திகேயன்,நெல்சன்,அனிருத் மூவரும் இணைந்து ஒரு ப்ரோமோ வீடீயோவை செய்துள்ளனர்,இதில் தளபதி விஜயுடன் போனில் உரையாடுவது என மேலும் ஒன்றை சேர்த்து செம ஜாலியான ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
SURPRISE Announcement on Thalapathy Vijay's Beast - Get Ready for a huge reveal!
07/02/2022 11:07 AM
'Thalapathy' Vijay's BEAST release date confirmed - Here's the latest update!
05/02/2022 02:46 PM