தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் M.சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம்வரும் M.சசிகுமார் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” மற்றும் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்” ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் அடுத்து தயாராகும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்,  சசிகுமார் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் காரி.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் காரி திரைப்படத்தை ஹேமந்த் எழுதி இயக்குகிறார் டி இமான் இசை அமைக்கும் காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் சசிகுமாரின் காரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள காரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…