தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று மாபெரும் ஹிட்டானது. மேலும் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் லைகா தயாரிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, இயக்குனர் ஷங்கர்-உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை லைகா தயாரிக்கிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பாக தயாராகியிருக்கும் திரைப்படம் பட்டத்து அரசன். அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து பட்டத்து அரசன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் களவாணி & வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டத்து அரசன் படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

லோகநாதன்.S ஒளிப்பதிவில், ராஜா முஹம்மது படத்தொகுப்பு செய்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பட்டத்து அரசன் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பட்டத்து அரசன் திரைப்படத்தின் ஸீனீக் பிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அசத்தலான அந்த ஸீனீக் பிக் வீடியோ இதோ…