இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற கலைஞராக ஒவ்வொரு திரை கலைஞர்களுக்கும் முன்னோடியாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நாயகன் திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணிரத்னம் - கமல்ஹாசனின் #KH234 திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் சென்று திரும்பிய கமல்ஹாசன் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னையின் போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது நலமாக இருப்பதாகவும் இருமல் மற்றும் சளி தொந்தரவு இருப்பதால் அடுத்த ஓரிரு நாட்களில் வீடு திரும்ப இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி !#GalattaNews 📢 @ikamalhaasan #Hyderabad #MakkalNeedhiMaiam #Hospital pic.twitter.com/qiO45NUFYx

— Galatta Media (@galattadotcom) November 24, 2022