'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!

தளபதி விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புதிய புகைப்படம்,lokesh kanagaraj thanks note to wishes thalapathy vijay | Galatta

தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கி தற்போதைய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான காட்சி அமைப்புகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் என ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்கள் வழக்கமான கமர்சியல் ஃபார்முலாக்களில் இருக்கும் சில க்ளீஷேவான விஷயங்களைத் தவிர்த்து பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களாக மக்களை மகிழ்வித்து வருகின்றன. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கிய கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியாக முதல் முறை தளபதி விஜய் உடன் இணைந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி நட்சத்திர இயக்குனராக லோகேஷ் கனகராஜை உயர்த்தியது.

பின்னர் நான்காவது திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் ஃபேன் பாய் சம்பவமாக செதுக்கிய விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெகார்டாக மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இந்த வரிசையில் அடுத்த மிக முக்கிய படமாக தயாராகி வருகிறது லியோ. விஜயின் 67 வது திரைப்படமான லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் கிட்டத்தட்ட வாரிசு படத்திற்கு முன்பிருந்தே கிளம்பியது. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டியது. அதற்கு மேல் முன்னதாக கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருக்கும் LCU யுனிவர்சில் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மிஷ்கின் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனிடையே இன்று மார்ச் 14ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய திரை உலகின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி சொன்னால் போதாது தான், இருப்பினும் உங்களது இதயத்தில் இருந்து வந்த வாழ்த்துகள், MASHUPS, வீடியோக்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கான நன்றிகள். இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது. உங்கள் அனைவரையும் என்டர்டெய்ன் செய்வதற்கு என்னுடைய இதயம் மற்றும் ஆத்மாவை அர்ப்பணிப்பேன். நன்றி... எக்கச்சக்கமான அன்பு!" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். மேலும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “அனைத்திற்கும் நன்றி விஜய் அண்ணா” என்று குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
 

Thanx a lot @actorvijay na for everything ❤️ pic.twitter.com/iSc31Xs9q1

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023

Thank You wouldn’t be suffice, still a billion Thanx for all the hearty wishes and all the Mashups, Video edits, Fan pages. It makes me more responsible and I would put my heart and soul in entertaining people. Thank you all, Lots of Love🙏🏻❤️😘

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!
சினிமா

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!

'பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரனே, மகனே!'- லோகேஷ் கனகராஜுக்கு சஞ்சய் தத்தின் அன்பு வார்த்தைகள்! ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ
சினிமா

'பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரனே, மகனே!'- லோகேஷ் கனகராஜுக்கு சஞ்சய் தத்தின் அன்பு வார்த்தைகள்! ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ

சர்ப்ரைஸாக வந்த தனுஷின் வாத்தி பட ஸ்பெஷல் பரிசு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

சர்ப்ரைஸாக வந்த தனுஷின் வாத்தி பட ஸ்பெஷல் பரிசு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான வீடியோ இதோ!