சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணையும் தலைவர்171 படம் குறித்து சர்ப்ரைஸ் வைக்கும் லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ 

ரஜினிகாந்தின் தலைவர்171 சர்ப்ரைஸ் வைக்கும் லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj surprise hint about thalaivar171 superstar rajinikanth movie | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணையும் தலைவர்171 படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸாக HINT கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதலே மாநகரம் , கைதி என தனது படங்களால் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் எனும் மெகா ஹிட் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் உடன் கைகோர்த்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் திரைப்படமாக பெரும் வெற்றி பெற்றது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் உடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. 

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களில் 125 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. வருகிற ஆயுத பூஜை வெளியிடாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் "நா ரெடி" பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே நேற்று ஜூலை 19ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது பாடல் குறித்து பேசியபோது, “அது வருவதற்கு இன்னும் தாமதமாகும் என்றும் இந்த படம் கைதி மாதிரியான ஒரு படம்” என்றும் லியோ படம் குறித்த சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை கொடுத்தார். அதேபோல் பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் கைதி 2 திரைப்படம் குறித்து பேசியபோது, அடுத்து ஒரு பெரிய படத்திற்கு பிறகு தயாராகும் எனவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த சில வாரங்களாக அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைய இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் பெரிய படம் ரஜினிகாந்தின் தலைவர் 171 தான் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் கோயம்புத்தூரில் விழா முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, “கமல்ஹாசன் அவர்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களோடும் ஒரு படம் பண்ண போவதாக பேசிக் கொள்கிறார்களே? எனக் கேட்டபோது, “அதை இப்போது சொல்ல முடியாது” என்றும் “தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர வேண்டும்” என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 171 படத்தில் இணைவதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த வைரல் வீடியோ இதோ…
 

சினிமா

"மாநகரம் லோகேஷிடம் இந்த LOKI சொல்லும் அட்வைஸ் என்ன?"- அசத்தலான பதிலளித்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ

'விஜய் அண்ணா உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை!'- லியோ பற்றி லோகேஷ் கனகராஜின் அதிரடி Exclusive பேட்டி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

'விஜய் அண்ணா உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை!'- லியோ பற்றி லோகேஷ் கனகராஜின் அதிரடி Exclusive பேட்டி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!