இந்தியன் 2: உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஷங்கர் கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ் GLIMPSE இதோ!

கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்,shankar shared a new glimpse of indian 2 on kamalhaasan birthday | Galatta

ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் கொண்டாடும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து புதிய சர்ப்ரைஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...சேனாபதியை மீண்டும் கொண்டு வருவதற்கு உங்களோடு மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகவும் அற்புதமாக இருக்கிறது! தொடர்ந்து இதேபோல் நீங்கள் எங்களை மகிழ்வித்து கொண்டே இருப்பீர்கள் தொடர்ந்து எஎங்களுக்கு உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உலகநாயகன் கமல்ஹாசனோடு இருந்த அட்டகாசமான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

 

Wishing our Ulaganayagan ⁦@ikamalhaasan⁩ sir a very happy birthday! It is wonderful to have had the chance to work with you again to bring Senapathy back! Hope you keep entertaining us and continue to inspire millions more! #indian2 pic.twitter.com/tGpA6In56I

— Shankar Shanmugham (@shankarshanmugh) November 7, 2023

ரசிகர்களின் ரசனையை மெருகேற்றிய மகத்தான மகா கலைஞனான உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் இந்த கலைஞானிக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த அவரது நடிப்பில் அட்டகாசமான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர் உடன் 2வது முறையாக இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த  பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிற திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். 

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, SJ. சூர்யா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த நவம்பர் 3ம் தேதி வெளிவந்த இந்தியன் 2 AN INTRO எனும் டீசர் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்து அறிவிப்புகள் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக நடிகர் பிரபாஸின் கல்கி 2898AD படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வித்தியாசமான ஆக்சன் திரைப்படமாக உருவாகும் THUG LIFE படத்தில் நடிக்கும் உலகநாயகன் தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் KH233 படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.