RJபாலாஜி படத்திற்காக நடிகராக மாறுகிறாரா லோகேஷ் கனகராஜ்..? விவரம் உள்ளே
By Anand S | Galatta | November 09, 2022 18:08 PM IST

தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனராக விளங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இதனையடுத்து கைதி 2 மற்றும் தளபதி 67 என அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் #தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் கைதி 2 திரைப்படமும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் பக்கா எண்டர்டெயின்மென்ட் படங்களை நடிகராகவும் இயக்குனராகவும் வழங்கி வரும் RJ.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படத்தில் கௌரவத் தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக பேசப்படுகிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிப்பில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் RJ.பாலாஜி கதாநாயகனாக நடிக்க, பிக் பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மக்களை கவரும் RJ.பாலாஜி நாளை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உலகக்கோப்பை T20 அரை இறுதி ஆட்டத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்யும்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடன் இணையவுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்போது போட்டியின் நடுவே RJ.பாலாஜியின் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளதாகவும் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.எனவே படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாடு காத்திருக்கின்றனர். காத்திருப்போம்…
Get ready to catch @RJ_Balaji and @Dir_Lokesh together in the commentary box tomorrow 🎙
— Vels Film International (@VelsFilmIntl) November 9, 2022
First look launch of @RJ_Balaji's next with @VelsFilmIntl comes out tomorrow at 12.30PM, during the #IndvsEng game!
Gear up for some great fun! pic.twitter.com/7k8XvdN2aW
Big news for Marvel Fans | Shoot for Loki 2 begins | Photos leaked!!
05/07/2022 04:00 PM
Raghava Loki: Priyamani's a true professional
02/06/2011 12:00 AM