மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டில் (2022) மட்டும் பீஷ்ம பர்வம், CBI 5 : The Brain, புழு, Rorschach உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மலையாளத்தின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கிறிஸ்டோபர் என்னும் த்ரில்லர் திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் காதல் - தி கோர்.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து காதல் - தி கோர் படத்தை தயாரிக்கின்றன.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சர்ப்ரைஸாக வருகை தந்துள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகாவின் காதல் - தி கோர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சூர்யாவின் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

We had a very special visitor at the sets of @KaathalTheCore 😊

Absolute privilege to have hosted none other than Nadippin Nayakan @Suriya_offl Sir ❤️

Stills : #LebisonGopi #KaathalTheCore Shoot In Progress
#KaathalTheCore #Mammootty #Jyotika #MammoottyKampany pic.twitter.com/gdCRGNQWhv

— Kaathal - The Core (@KaathalTheCore) November 9, 2022

Happy to have hosted Dear @Suriya_offl at the location of @KaathalTheCore 😊 pic.twitter.com/2vs5u2ROlg

— Mammootty (@mammukka) November 9, 2022

@Suriya_offl Anna ❤️At @mammukka - #Jyotika 's #KaathalTheCore Film Sets Today | Can Expect A Pic Of Mollywood MegaStar & Naddippin Nayagan Together 🔥😉 #Suriya42 #Vaadivaasal #EtharkkumThunindhavan pic.twitter.com/HwOAVFaUIF

— Suriya Fans Club ™ (@SuriyaFansClub) November 9, 2022