வித்தியாசமான படங்களா செலக்ட் பண்ணி ரசிகர்கள் கிட்ட நல்ல பேர் வாங்கி இப்போ தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய நடிகரா இருக்கவர் கார்த்தி.முதல் மூன்று படங்களையே செம ஹிட் அடிச்சு , பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்தவர் கார்த்தி.

சில படங்கள் சறுக்கினாலும் , தொடர்ந்து பல வெற்றிகளோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வெச்சுகிட்டு வளர்ந்து வர்ற முன்னணி நடிகர்கள்ல ஒருத்தரா இருக்குறாரு.இப்போ 3 மாசத்துல விருமன்,பொன்னியின் செல்வன்,சர்தார்ன்னு 3 ரிலீஸ் பண்ண ரெடியா வெயிட் பண்ணிட்டு இருக்காரு கார்த்தி.

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை வாங்கிட்டு இருக்கு.அடுத்ததா கார்த்தி நடிச்சுருக்க சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகுது.கார்த்தி ஏற்கனவே சில பல தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு ரிலீஸ்கள் கொடுத்து இருக்காரு.

பண்டிகைன்னா 2-3 படங்கள் சேர்ந்து ரிலீஸ் ஆகுறது வழக்கம் அப்படி இதுக்கு முன்னாடி கார்த்தி படங்கள் வேற ஹீரோ படங்களோட என்ன ரிலீஸ் ஆகியிருக்கு,சர்தார் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போறதால கார்த்தியோட தீபாவளி ரிலீஸ்கள் மற்றும் அதன் போட்டிகள் குறித்த ஒரு சிறப்பு பார்வை இப்போ பார்க்கலாம்

ஆல் இன் ஆல் அழகுராஜா - ஆரம்பம் - பாண்டியநாடு

2013-ல கார்த்தியோட முதல் தீபாவளி ரிலீஸ் ரிலீஸ் ஆல் இன் ஆல் அழகுராஜா ரிலீஸ் ஆச்சு.இந்த படம் அஜித்தோட ஆரம்பம் படத்தோட போட்டி போட்டுச்சு.இந்த படம் பெரிய வரவேற்பை வாங்களனாலும் , முதல் தீபாவளி ரிலீஸ்னால இந்த படம் ஸ்பெஷல்

காஷ்மோரா - கொடி

2016-ல் கார்த்தி நடிச்ச காஷ்மோரா படமும் தனுஷ் நடிச்ச கொடி படமும் ஒண்ணா ரிலீஸ் ஆச்சு.ரெண்டு படமும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் , காஷ்மோரா படத்தோட காமெடி காட்சிகள் ரசிகர்கள் கிட்ட Favourite-ஆ இருக்குது.

கைதி - பிகில்

2019 தீபாவளி தளபதி விஜய் நடிச்ச பிகில் படமும்,கார்த்தி நடிச்ச கைதி படமும் ஒண்ணா ரிலீஸ் ஆச்சு.ரெண்டு படமுமே ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை வாங்கி பாக்ஸ்ஆபிஸ் ஹிட் அடிச்சுது.கைதி படம் கார்த்திக்கு முதல் 100 கோடி வசூல் படமாக அமைஞ்சது

சர்தார்  - ப்ரின்ஸ்

இப்போ நாலாவது தடவையா கார்த்தி நடிச்ச சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகுது.பல கெட்டப்கள்ள கார்த்தி நடிச்சிருக்காரு.கூடவே சிவகார்த்திகேயன் நடிச்ச ப்ரின்ஸ் படமும் ரிலீஸ் ஆகப்போகுது.ரெண்டு படத்துக்குமே நல்ல ஓப்பனிங் இருக்கும்ன்னு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதிரி முன்னணி நடிகர்கள் கூட அவர் போட்டி போட்டு படங்கள் பண்ண தமிழ் சினிமாவோட தரமும்,மார்க்கெட்டும் உயர்ந்துட்டே இருக்கு..இன்னும் நிறைய தீபாவளி ரிலீஸ்கள் கார்த்தி பண்ணுவார்ன்னு எதிர்பார்க்கப்படுகிறது.