ஓவர்சீஸில் அலப்பறை கிளப்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்... அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஓவர்சீஸில் 105 கோடி வசூல்,Superstar rajinikanth in jailer movie crossed 105crores in overseas | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பக்கா ட்ரீட்டாக வந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய திரை உலக ரசிகர்களும் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது. அதேபோல் தனக்கென தனி பாணியில் பக்கா டார்க் காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்கள் & ட்ரோல்களுக்கு நடுவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகியுள்ளது. தனது முந்தைய எதிர்மறை விமர்சனங்களை சொல்லி அடித்தது போல பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை செம்ம ட்ரீட்டாக கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன். 

அதுபோலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த பக்கா ஆக்சன் என்டர்டெய்னராக உலகம் முழுவதும் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரிலீசான நான்கு நாட்களில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களோடு ரிப்பீட் மோடில் ரசிகர்கள் ரசிகர்கள் நிறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடும் ஜெயிலர் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை ஏற்கனவே படைத்திருப்பதாகவும் வரும் நாட்களில் இன்னும் பெரிய சாதனைகளை படைக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வெளிநாடுகளில் மட்டும் வெளியான கடந்த நான்கு நாட்களில் இதுவரை எந்த தமிழ் படமும் எட்டாத மிகப் பெரிய வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் படைத்துள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெறும் நான்கே நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் மொத்தமாக 105 கோடிக்கு மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்திருப்பதாக தற்போது வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மீண்டும் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் தான் ரஜினிகாந்த் நிரூபித்த ஜெயிலர் படத்தின் இந்த அதிரடி அறிவிப்பு இதோ…
 

Following the first day Record, The total Overseas collection for the first four days crosses a Whopping 105 crores smashing all previous records.

The Superstar has proved that Rajinikanth is an emotion all over the world and the Magic Continues!#Jailer #JailerBlockbuster pic.twitter.com/hTlRmV0Uvv

— Ayngaran International (@Ayngaran_offl) August 14, 2023