லேடி சூப்பர் ஸ்டார் 75: ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நயன்தாராவின் 75வது பட அசத்தலான டைட்டில் & முதல் GLIMPSE வீடியோ இதோ!

நயன்தாராவின் 75வது பட அசத்தலான டைட்டில் & முதல் GLIMPSE வெளியீடு,Lady superstar nayanthara in 75th movie annapoorani first glimpse | Galatta

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படமாக உருவாகும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் முதல் GLIMPSE தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராகவும் விளங்கும் நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னதாக முதன்முறை ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை நயன்தாரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

அடுத்ததாக மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்குனர் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நடிக்க இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்திலும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக உருவாகும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கும் இந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.  

நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் GLIMPSE வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டனர். நயன்தாராவின் 75வது திரைப்படமாக வரவிருக்கும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளி வந்திருக்கும் அன்னபூரணி படத்தின் முதல் GLIMPSE வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா, பாட்டி உட்பட அனைவரும் பக்தி பரவசத்தோடு காலை வேளையில் பூஜை செய்து கொண்டிருக்க, பிசினஸ் லாஜிஸ்டிக் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் புத்தகத்திற்குள் சிக்கன் லெக் பீஸ் இருக்கும் ஒரு போஸ்டரை நயன்தாரா பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அன்னபூரணி படத்தின் GLIMPSE வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.