சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த அமிதாப் பச்சன்... ட்ரெண்டாகும் தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

தலைவர் 170 படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன்,amitabh bachchan joins with rajinikanth in thalaivar 170 shooting | Galatta

இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் தயாராகி வரும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அமிதாப்பச்சன் அவர்கள் இணைந்திருக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முன்னதாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தனது மகளுமான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் கிரிக்கட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியிடாய் ரிலீஸ் ஆகும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வருகிறார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த வரிசையில் தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்படத்தில் 170 ஆவது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த தலைவர் 170 திரைப்படம் ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக நடிகை மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில்  பாலிவுட் நட்சத்திர நாயகர் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் துஷாரா விஜயன் GM.சுந்தர் மற்றும் விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். SR.கதிர் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் தலைவர் 170 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அமிதாப்பச்சன் அவர்கள் தற்போது இணைந்து இருக்கிறார். அமிதாப்பச்சன் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது X பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “33 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில், என் வழிகாட்டி ஸ்ரீ அமிதாப்பச்சன் உடன் இணைந்து பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது.” என பதிவிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ…
 

After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y

— Rajinikanth (@rajinikanth) October 25, 2023