விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் நடித்துள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடரில் நடித்த பல பிரபலங்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.ஒவ்வொருவருக்கும் தனி தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

ஸ்டாலின்,சுஜிதா,வெங்கட்,ஹேமா,குமரன்,சரவணவிக்ரம்,சாய் காயத்ரி என பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.கதையில் 3 ஹீரோக்கள்,3 ஹீரோயின்கள் என இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தது முல்லை என்ற கதாபாத்திரம் தான்.

முதலில் சித்ரா இந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்,இவருக்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து வந்தனர்,இவர் கடந்த 2020 டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.இவரது இழப்பு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி நடித்து வந்தார்.

காவியாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற அவர் அடுத்த முல்லையாக அசத்தி வந்தார்.சில நாட்களுக்கு முன் காவியா விலகுவதாக அறிவித்தார்.இவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது காவ்யாவிற்கு பதிலாக சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்து அசத்திய லாவண்யா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.