தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இவற்றை தவிர பல புதிய தொடர்களும் தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழில் சில வாரங்களுக்கு முன் புதிதாக ஒளிபரப்பை தொடங்கி விறுவிறுப்பாக சென்று வரும் தொடர் தவமாய் தவமிருந்து.

இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.தற்போது இந்த தொடரில் நடித்து வந்த ஹாஸினி சில காரணங்களால் விலக அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை லதாராவ் இணைந்துள்ளார்,இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.