தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேற்று (ஏப்ரல் 28) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகை தாண்டி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து இந்தியில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ஹிந்தியில் தயாராகியுள்ள ஃபர்ஸி வெப் சீரிஸில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராசி கண்ணா, கேகே மேனன், ரெஜினா கெஸன்ட்ரா, ஜாகீர் உசேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோவில் அடுத்தடுத்து வரிசையாக வெளிவரும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் வகையில் புதிய வீடியோ தற்போது வெளியானது. இந்த அறிவிப்பு வீடியோவில் ஃபர்ஸி வெப் சீரிஸில் விஜய் சேதுபதியின் லுக் வெளியானது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…