இரவில் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி, போலீசார் இருவர் பணம் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்து உள்ள நீலம்பூர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

அந்த தனியார் விடுதியின் அருகே கடந்த 25 ஆம் தேதி அன்று திங்கள் கிழமை இரவு காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஒரு காதல் ஜோடி, அந்த பகுதியில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாதாரண உடையில் வந்த கருமத்தம்பட்டி தலைமை போலீசார் ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடியை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அந்த காதலனை இந்த போலீசார் தாக்கவும் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு, அந்த ஜோடி மீது மிரட்டிய அந்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி காதல் ஜோடி, தங்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பயந்து போய், அந்த போலீசாரிடம் கொடுத்து உள்ளனர். 

மேலும், “இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது” என்றும், அந்த இரு போலீசாரும் அந்த காதல் ஜோடியை மிரட்டிவிட்டு சென்று உள்ளனர்.

இதனால், வீடு திரும்பிய அந்த காதல் ஜோடி கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அடுத்த நாளே இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த காதலன், அங்குள்ள கருமத்தம்பட்டி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்து உள்ளார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த காவல் நிலைய போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், தனிப்படை அமைத்து காதல் ஜோடியிடம் பணம் பறித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். 

அதன் படி, குறிப்பிட்ட அந்த தனியார் ஹோட்டலின் அருகில் இருந்த சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த விசாரணையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்தது கருமத்தம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, காதல் ஜோடியிடம் பணம் பறித்த அந்த இரு போலீசாரையும் விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, “அந்த பகுதியில் இப்படி தனியாக சிக்கும் காதல் ஜோடிகள் பலரை இதுபோன்று மிரட்டி பணம் பறித்து வசூல் வேட்டை நடத்தியதும்” இந்த விசாரணையில் தெரிய வந்தது. 

இதனையடுத்து, காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசார் இருவர் மீதும், 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை அதிரடியாக கைது செய்தனர். 

பின்னர், கைது செய்யப்பட்ட அந்த இரு போலீசாரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே, போலீசாரே காதல் ஜோடிகளை இரவு நேரத்தில் மிரட்டி பணம் பறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.