மலையாளத்தில் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சோபின் சாஹிர் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பா என ரீமேக் செய்யப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட கடந்த மே 6-ஆம் தேதி தமிழில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த தர்ஷன் & லாஸ்லியா மற்றும் யோகி பாபு வேடத்தில் நடித்துள்ளனர்.

ஆர்வி ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜிப்ரான் இசையில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் தீப்தி சுரேஷ் இணைந்து பாடியிருக்கும் அலை அலை பாடல் வீடியோ தற்போது வெளியானது. அந்த பாடல் வீடியோ இதோ…