தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வரும் வாத்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் அட்லுரி இயக்கத்தில் தயாராகி வரும் வாத்தி படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து வரும் நடிகர் தனுஷ், முன்னதாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வ ராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வரும் தனுஷ், அவென்ஞசர்ஸ் எண்ட் கேம் படத்தின் இயக்குனர் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் வருகிற ஜூலை 15ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களான ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தி க்ரே மேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் ஜேக்கப் தி ஹன்டர் என தகவல் வெளிவந்துள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@actordhanushkraja)