ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், நம்ம ஊர் சச்சின் காலத்து கிரிக்கெட் வீரார் ஆவார்.

சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த 198 போட்டிகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை சைமண்ட்ஸ் குவித்து இருக்கிறார். அத்துடன், 133 விக்கெட்களையும் அவர் கைப்பற்றி உள்ளார்.

குறிப்பாக, கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் எண்ணற்ற வெற்றிகளில் மிக முக்கிய பங்கு ஆற்றியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 

இப்படி, கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி இருக்கிறார். 

இதனையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சைமண்ட்ஸ், ஓய்வு பெற்றார்.

இப்படியாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் தனது ஓய்வு நாட்களை கடந்துக்கொண்டு இருந்தார்.

அதுவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே மறைந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மீள்வதற்கள், தற்போது அந்நாட்டின் முன்னாள் வீரர் சைமண்ட்ஸ்சின் மறைவு செய்தி. அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று இரவு அந்நாட்டில் காரில் சென்றுக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, ஏற்பட்ட கார் விபத்தில் எதிர்பாரத விதமாக, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், உயிரிழந்து உள்ளார். 

சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்து உள்ள செய்தியை, குயின்ஸ்லாந்து காவல் துறை தற்போது உறுதி செய்து உள்ளது.

கிரிக்கெட் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்யின் மறைவு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

தற்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்யின் மறைவுக்கு, முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விவிஎஸ் லக்ஸ்மன்

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஸ்மன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “காலை எழுந்தவுடன் சைமண்ட்ஸ் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் சோகமான ” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் வீரர் வாகன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சைமண்ட்ஸ் மறைவு செய்தி உண்மையானது என உணரமுடியவில்லை” என்று, தனது அதிர்ச்சியை இப்படியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சோயிப் அக்தர்

சைமண்ட்ஸ் மறைவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைந்த செய்தியை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். களத்திலும் சரி வெளியிலும் சரி நாங்கள் சிறந்த உறவைப் பகிர்ந்து கொண்டோம்” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதனிடையே, சமீப காலமாக ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி மார்ஷ் மற்றும் ஷேன் வார்ன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், கடந்த 5 மாதங்களில் மட்டும் 3 ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்திருப்பது, ஒட்டுடோத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.