இந்திய திரை உலகின் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளிவந்த சாணிக் காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

முன்னதாக சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு பகத் பாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் ரிலீசாகவுள்ள திரைப்படம் வாஷி. கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள வாஷி திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ளார். ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள வாஷி படத்திற்கு, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாஷி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த மோஷன் போஸ்டர் இதோ