தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான D.இமான் தொடர்ந்து தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, ஆர்யா, விஷால் உள்ளிட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள D.இமான் இசையில் இந்த ஆண்டு(2022) கடைசியாக வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

தொடர்ந்து இந்த ஆண்டில் ஆர்யாவின் கேப்டன், பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை மற்றும் மை டியர் பூதம், சசிகுமாரின் காரி ஆகிய திரைப்படங்கள் D.இமானின் இசையில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் D.இமான் மற்றும் அவரது முதல் மனைவியும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் D.இமானின் மறுமணம் தற்போது நடைபெற்றுள்ளது. D.இமானின் மறுமணத்திற்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. பிரபல இயக்குனர் உபால்டுவின் மகள் எமலியை இசையமைப்பாளர் - D.இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
music composer d imman gets married again