திருநெல்வேலி கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், கல்குவாரியின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த கல்குவாரியில் சுமார் 300 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் நேற்றைய தினம் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, யாரும் எதிர்பாரத விதமாக, திடீரென்று அந்த கல் குவாரியில் ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்து உள்ளது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் நள்ளிரவில் திணறி உள்ளனர். 

அப்போது, இந்த “இந்த கல்குவாரியில் சுமார் 300 அடி பள்ளத்தில் 6 தொழிலாளர்கள்” பணியாற்றிய நிலையில், அவர்கள் அனைவரும் அடியில் சிக்கிக்கொண்டதாகவும்” கூறி உள்ளனர். 

இதனையடுத்து, அந்த நள்ளிரவு நேரத்தில் 300 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அந்த 6 பேரையும் மீட்க பாளையங்கோட்டை நாங்குநேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மீட்பு பணியை மேற்கொண்டனர். 

ஆனால், அந்த நேரத்தில் மழை பெய்த காரணமாக, இரவு நேரத்தில் அங்கு மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. 

முக்கியமாக, மழையின் கரணமாக அந்த பள்ளத்தில் மண்சரிவு மற்றும் கற்கள் விழுவதனால், மீட்புப்பணியின் சிறிது தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்காகவே, தூத்துக்குடியில் இருந்து மிகப் பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் அதிகாலை முதல் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, காலையில் விடிந்ததும், மீண்டும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொண்ட நிலையில், முதல் கட்டமாக  2 பேரை உயிருடன் மீட்டு உள்ளனர். 

அதே நேரத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், இந்த விபத்தில் சிக்கிய மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து திருநெல்வேலி விரைந்து வந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அத்துடன், அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப்பணியை தற்காலிகமாக அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, சம்மந்தப்பட்ட அந்த கல்குவாரியின் உரிமையாளரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேசும் போது, “நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக குவாரியின் உரிமையாளர் சங்கர நாராயணனை கைது செய்து உள்ளோம். அவரிடம் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்திப்பட்டு வருகிறது. மற்ற தகவல்கள், முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்” என்றும், கூறினார். 

மேலும், இந்த விபத்து தொடர்பாக, சம்மந்தப்பட்ட குவாரி உரிமையாளர் சங்கர நராயணனின் மகனும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம், நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.