பல கோடி சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாகவும் தென்னிந்திய திரை உலகின் நட்சத்திர நாயகியாகவும் வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா நடித்து வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டானது.

முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக ஹிந்தியில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் லயன் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் O2. 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ் பாபு & S.R.பிரபு தயாரித்துள்ள O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்துள்ளார்.முன்னணி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள O2 திரைப்படத்திற்கு ராஜேஷ் கிரிபிரசாத் மற்றும் மோகன்ராஜ் பாடல்களை எழுதியுள்ளனர். 

நயன்தாராவின் O2 திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், O2 திரைப்படத்தின் டீசர் நாளை மே 16ஆம் தேதி காலை 10மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S R Prabhu (@prabhu_sr)