விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் டீஸர் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | January 03, 2021 10:28 AM IST

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் விஜய் ஆண்டனி பெற்றார். கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியானது. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T.D ராஜா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நாயகியாக நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆக்ஷன் அதிரடி நிறைந்த வண்ணம் உள்ளது கோடியில் ஒருவன் டீஸர். கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த ஆண்டு சம்மருக்கு இந்த படம் வெளியாகவுள்ளது.
முன்னதாக விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையின் ஹிட் பாடல்களில் ஒன்றான நம்ம ஊரு சிங்காரி பாடலை ரீமிக்ஸ் செய்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார் விஜய் ஆண்டனி. Saregama Carvaan வழங்கிய இந்த பாடலில் அவரே தோன்றி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Aari's Aleka Tamil Movie Official Trailer | Aishwarya Dutta
03/01/2021 10:53 AM
STR's Maanaadu motion poster and teaser plans announced | Venkat Prabhu | Yuvan
02/01/2021 05:25 PM