பெண் போலீஸ் ஒருவர் தான் பணிபுரிந்த காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதற்காக, கணவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு, பல்வேறு வழக்குகளுக்காகக் காவல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட இருசக்கர வாகனங்கள் எல்லாம் அந்த பகுதியில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

அதே நேரத்தில், கூடங்குளம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திருட்டுப் போகும் சம்பவங்கள் அங்கு வாடிக்கையாக நடைபெற்று வந்துள்ளது. 

அதன் படி, கடந்த தீபாவளி அன்று வள்ளியூர் செண்பக ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன் ராஜ், என்பவரின் இருசக்கர வாகனத்தை, அந்த பகுதியைச் சேர்ந்த வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜெகதா விசாரணைக்காகப் பறிமுதல் செய்தார். ஆனால், அதன் பிறகு குறிப்பிட்ட அந்த வாகனம், கூடங்குளம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பல்வேறு வழக்குகளுக்காகக் கொண்டு வரப்பட்டு கூடங்குளம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவம் அங்கு வாடிக்கையாக நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், கடந்த தீபாவளி அன்று வள்ளியூர் செண்பக ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரது இருசக்கர வாகனத்தை, வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜெகதா விசாரணைக்காகப் பறிமுதல் செய்துள்ளார். பிறகு, கூடங்குளம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, விசாரணை முடிந்து மதன்ராஜ் தனது இரு சக்கர வாகனத்தை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, அது திருடு போனது தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த மதன்ராஜ், இது தொடர்பாக பல முறை விளக்கம் கேட்டும், அவருடைய இருசக்கர வாகனத்தை மீட்டுக்கொடுக்காமல், போலீசார் அலட்சியமுடன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மதன்ராஜ், உடனடியாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வாட்ஸ்ஆப் மூலமாகப் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் படியெ, இருசக்கர வாகன திருட்டு விவகாரத்தில் கூடங்குளம் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் தான், அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் 29 வயதான கிரேஹியா, தனது கணவருடன் சேர்ந்து புதிய இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இத்தனைக்கும், கடந்த 10 மாதங்களாகத் தான் பெண் காவலர் கிரேஸியா, கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்து உள்ளார்.

அத்துடன், பெண் காவலர் கிரேஸியா, இவருக்கு வாரத்தில் 3 நாட்கள் இரவு நேர பணியும், வழங்கப்பட்டு உள்ளது. இதனால், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், பெண் காவலர் கிரேஸியா, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் தனது கணவர் மூலம் திருடி விற்கத் திட்டமிட்டு உள்ளார். அதன்படி, இரவு பணியில் இருக்கும் போது, தனது கணவர் அன்புமணியை வரவைத்து, மிகவும் விலை உயர்ந்த புதுவகையான இருசக்கார வாகனங்களைத் திருட வைத்து உள்ளார். இதனையடுத்து, கணவனும் மனைவியும் திருடிய இருசக்கர வாகனத்தை பாதி விலைக்கு விற்று வந்து உள்ளதும் தெரியவந்தது.

இதனால் கிரேஸியாவும், அவரது கணவர் அன்புமணியும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். மேலும், காவல் நிலையத்தில் வைக்கப்படும் செல்போன்களையும் கிரேஸியா திருடி வந்துள்ளார். இதனையடுத்து, பெண் காவலர் கிரேஸியாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் பெண் காவலர் மற்றும் அவரது கணவர் அன்புமணியை கூடங்குளம் காவல் ஆய்வாளர் அதிரடியாகக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து தற்போது, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போன், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.