ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் FAN BOY சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி ALL TIME RECORD ஆக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 

கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, ஜாபர் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

அன்பறிவு மாஸ்டர்களின் பக்காவான ஸ்டண்ட் இயக்கத்தின் ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ராக்ஸ்டார் அனிருத்தின் அதிரடியான பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், ஃபிலோமின ராஜின் கச்சிதமான படத்தொகுப்பும், நல்ல ஆக்ஷன் பட அனுபவத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தை பார்த்து ரசித்த கேஜிஎஃப் படங்களின் இயக்குனர் பிரஷாந்த் நீல் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த விக்ரம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள், கமல்ஹாசன் சார், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரை ஒன்றாக பார்ப்பதற்கே நல்ல விருந்தாக இருக்கிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,உங்கள் படைப்புகளுக்கு எப்போதும் பெரிய ரசிகன் நான்!. அனிருத் நீங்கள் ஒரு ராக்ஸ்டார். மிகப் பெருமையாக இருக்கிறது அன்பறிவு மாஸ்டர்ஸ், இன்னமும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை சூர்யா சார் நீங்கள் நெருப்பு தான்…" என பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரஷாந்த் நீலின் அந்த பதிவு இதோ…
 

Congratulations to the entire team of #Vikram. Watching @ikamalhaasan sir, @VijaySethuOffl and #FahadhFaasil together was a feast. Always a big admirer of your work @Dir_Lokesh.
Your a rockstar @anirudhofficial.
Very proud of our masters @anbariv, wishing you both more success! https://t.co/dADow8CD0Y

— Prashanth Neel (@prashanth_neel) July 11, 2022