ரேடியோ ஜாக்கியாக தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்த RJ பாலாஜி தற்போது நடிகராக தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக RJ பாலாஜி இயக்கி நடித்து வெளிவந்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த வரிசையில் பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக கடைசியாக RJ பாலாஜி இயக்கி நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 

ஜீ ஸ்டுடியோஸ் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, RJ.பாலாஜி-NJ.சரவணன் இணைந்து இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஊர்வசி, சத்தியராஜ், லலிதா, அபர்ணா பாலமுரளி, புகழ், யோகிபாபு, ஷிவானி நாராயணன், பவித்ரா லோகேஷ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் RJ.பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் ZEE 5 தளத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Elated to announce that the biggest family entertainer will be releasing on the 15th of July. Watch it only on #Zee5 Premium. Launching the trailer today at 5pm on Zee5, stay tuned.#VeetlaVishesham #VeetlaVisheshamOnZee5 #Zee5 #Zee5tamil #NammaVeetlaVishesham pic.twitter.com/F3dheWfgcp

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) July 11, 2022