தனது கடின உழைப்பாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் திரை உலகின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் தோன்றிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈசிஆரில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் #SURIYA41 படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி #SURIYA41 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் பிரபல மலையாள நடிகை நமீதா பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் #SURIYA41 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு தற்போது “வணங்கான்” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளியானது அந்த போஸ்டர் இதோ…
 

உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…! #DirBala #வணங்கான் #Vanangaan #Achaludu pic.twitter.com/OAqpCRCWgx

— Suriya Sivakumar (@Suriya_offl) July 11, 2022