பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் சிறந்த கதாநாயகியாக திகழும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் கடைசியாக வெளிவந்த சாணிக் காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

அடுத்ததாக சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடித்துள்ள வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள வாஷி திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ளார். 

ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ள வாஷி திரைப்படத்திற்கு ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். வாஷி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாஷி திரைப்படத்தின் முதல் பாடலாக யாதொன்னும் பரயாதே பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…