இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் குட் லக் சகி. துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடித்த கலக்கலான குட் லக் சகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்தடுத்து வரிசையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன.

முன்னதாக முதல்முறை இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கியுள்ள சாணிக் காயிதம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகரான  மகேஷ்பாபு நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கும் போல ஷங்கர் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முன்னணி நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காந்தாரி மியூசிக் வீடியோ தயாராகியுள்ளது. பிருந்தா மாஸ்டரின் நடன இயக்கத்தில் பவன்.CH இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள காந்தாரி பாடலுக்கு கோபி கிருஷ்ணன்-ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

தி ரூட் மற்றும் சோனி மியூசிக் இணைந்து வழங்கும் காந்தாரி  பாடல் நாளை பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில்  காந்தாரி பாடலின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.