“உனக்கு காதலன் கேட்கும்போது எனக்கு காதலன் ஏன் இருக்கக்கூடாதா?” என்று, தனது அம்மாவிடம் சண்டைப்போட்ட மகளை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத்தில் 35 வயதான பெண் ஒருவர், கணவனை பிரிந்த நிலையில், தன்னுடைய 16 வயதான மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அந்த 35 வயதான பெண்ணின் மகளான 16 வயதான இளம் பெண், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். வீட்டில் இருவரும் ஆண் துணை இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியான தருணததில், அந்த இளம் பெண்ணின் தாயான 35 வயதான பெண், அந்த பகுதியைச் சேர்ந்த நரசிம்மலு என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, தாயின் கள்ளக் காதல் விசயம், 16 வயதான மகளுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த அந்த 16 வயதான இளம் பெண், தனது தாயின் நடவடிக்கையை பிடிக்காமல், அந்த தாயை முற்றிலுமாக வெறுத்து வந்து உள்ளார்.

இப்படியான சூழலில் தான், அந்த 16 வயதான இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்தார். 

அத்துடன், அந்த இளைஞரையே திருமணம் செய்து, தனது தாயை விட்டு பிரிந்து காதலனுடன் சென்று சேர்ந்து வாழவும் அந்த 16 வயதான சிறுமி முடிவு செய்திருந்தார்.

இந்த சூழலில் தான், மகளின் காதல் விசயம், அந்த பெண்ணின் தாயிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால், அந்த பெண், தனது மகளிடம் சென்று, “உன் காதலை கை விட்டுவிடு” என்று வாக்கு வாதம் செய்திருக்கிறார்.

மேலும், தனது மகளிடம் பேசிய அந்த தாய், “அந்த இளைஞன் வேறு சாதியை சேர்ந்தவர் என்றும், அதனால், அவனை நீ திருமணம் செய்யக்கூடாது” என்றும், தனது மகளை வற்புறுத்தியிருக்கிறார்.

இதனால், அந்த இளம் பெண், “உனக்கு காதலன் கேட்கும்போது, எனக்கு காதலன் ஏன் இருக்கக்கூடாதா?” என்று வாக்குவாதம் செய்து சண்டை போட்டிருக்கிறார்.

இதனால், அந்த இளம் பெண்ணின் தாயார், தன்னுடைய கள்ளக் காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து, தனது மகளை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

அதன் படி, கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், அந்த தாயார், தன் மகளை அந்த  கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, தனது மகளை, அந்த தாயும், அவரின் கள்ளக் காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று உள்ளனர். இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் உடலை அந்த பகுதியில் ஒரு ஓரமான இடத்தில வீசிவிட்டு சென்று உள்ளனர்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பெற்ற மகளை கொலை செய்த அந்த இளம் பெண்ணின் தாயையும், அவரின் கள்ளக் காதலனையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.