தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான மிர்ச்சி சிவா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சிவா நடித்த தமிழ் படம், இயக்குனர் சுந்தர்.சி-யின் கலகலப்பு, இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னை, தமிழ் படம் 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றன.

முன்னதாக மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகியுள்ள சுமோ திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக விரைவில் ரிலீஸாக இருக்கும காசேதான் கடவுளடா படத்திலும் சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் சலூன் & கோல்மால் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ளது இடியட் திரைப்படம்.

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்து தில்லுக்குதுட்டு போன்ற ஹாரர் காமெடி திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ராம்பாலா இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில்   அடுத்ததாக வெளிவரும் இடியட் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன்  நிறுவனம் தயாரித்துள்ளது.  

நடிகர் சிவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி , ஊர்வசி, அக்ஷரா கௌடா, மயில்சாமி, ஆனந்தராஜ் & ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்டோர் நடித்துள்ள இடியட் படத்திற்கு விக்ரம் சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் மிர்ச்சி சிவாவின் இடியட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.