நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த பிரபுதேவாவின் அதிரடி பட ரிலீஸ் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்

பிரபுதேவாவின் பஹீரா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,prabhu deva in bagheera movie new release date announcement | Galatta

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடன கலைஞராகவும், நடன இயக்குனராகவும் திகழும் பிரபு தேவா அவர்கள் இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனராகவும் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். நடனக் கலைஞர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் பிரபு தேவா அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் ஸ்டைலாக நடித்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தேள், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் அட்டகாசமான ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக மை டியர் பூதம் உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபு தேவா நடிக்க ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த பொய்க்கால் குதிரை திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டும் பிரபு தேவா நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில், அடுத்த அதிரடி ஆக்ஷன் படமாக அறிமுக இயக்குனர் சாம் ஜோடிக்ரூஸ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள திரைப்படம் முஸாஸி. ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்க, பிரபு தேவாவுடன் இணைந்து மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள முஸாஸி படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, பிரசாத்.S.N இசையமைத்துள்ளார். 

அடுத்ததாக சமீபத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டாடா திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் அவர்களின் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகவும் ரேக்ளா திரைப்படத்தில் பிரபு தேவா நடித்து வருகிறார். இயக்குனர் அன்பு எழுதி இயக்கும் ரேக்ளா திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜீவா நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படத்தின் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பிளாஷ் பேக். அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த ஃப்ளாஷ் பேக் திரைப்படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து ரெஜினா கெஸ்ஸண்ட்ரா கதாநாயகியாக நடிக்க, S.யுவா ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே பிரபுதேவா நடிப்பில் மிரட்டலான சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருக்கும் திரைப்படம் பஹீரா. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பஹீரா திரைப்படத்தை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே பஹீரா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ள பகீரா திரைப்படத்தில் அமைரா டஸ்டர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செல்வகுமார் SK மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள பஹீரா திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, கணேசன்.S இசையமைத்துள்ளார். ஏற்கனவே பஹீரா திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் வருகிற மார்ச் 3ம் தேதி பிரபுதேவாவின் பஹீரா திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டர் இதோ…
 

Hey Singles.. Are You Ready to Celebrate your Valentine's Day? @PDdancing ‘s #Bagheera releasing on March 3rd 🐻

An @Adhikravi Pain KILLER @BharathanPic @AmyraDastur93 @Ganesan_S_ @nambessan_ramya @jananihere @SGayathrie @ssakshiagarwal @AbinandhanR @selvakumarskdop pic.twitter.com/xpPckCSsjC

— R V Bharathan (@RVBharathan) February 18, 2023

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..
சினிமா

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..

முதல் முதலில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மலையாள டைட்டிலை வெளியிட்ட படக்குழு -  வைரலாகும் அறிவிப்பு இதோ.
சினிமா

முதல் முதலில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மலையாள டைட்டிலை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் அறிவிப்பு இதோ.

இந்தியாவில் தளபதி விஜயின் வாரிசு எப்போது? - OTT ல் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு.. விவரம் உள்ளே..
சினிமா

இந்தியாவில் தளபதி விஜயின் வாரிசு எப்போது? - OTT ல் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு.. விவரம் உள்ளே..