கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்தது தற்போது தயாரிப்பாளராக சினிமாவில் களமிறங்கியிருக்கும் மகேந்திர சிங் தோனி தனது முதல் படைப்பாக தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படமான, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள LET'S GET MARRIED திரைப்படத்தின் இஸ் கிஸ் கிஃபா பாடல் தற்போது வெளியானது. ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் கேப்டன் கூல் MS தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து கேப்டனாக விளையாடி வருவதோடு நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5வது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
இதனையடுத்து தல தோனி தற்போது திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்கி சிக்சர் அடிக்க முடிவெடுத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அறிவித்த, MS தோனி, தனது முதல் தயாரிப்பாக, தமிழ் சினிமாவில் தயாரித்துள்ள முதல் தமிழ் திரைப்படம் தான் LET'S GET MARRIED. அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ள LGM (Let's Get Married) படத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்க, லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் LGM (Let's Get Married) படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். LGM திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஜூலை மாதம் 28ம் தேதி LGM திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் LGM (Let's Get Married) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 10ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி தோனி இருவரும் இணைந்து வெளியிட LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகி பெரு எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், LET'S GET MARRIED திரைப்படத்தின் இஸ் கிஸ் கிஃபா பாடல் தற்போது வெளியானது. ரசிகர்களுக்கு பக்கா என்டர்டெய்ன்மென்ட் ட்ரீட்டாக வெளிவர இருக்கும் இந்த LET'S GET MARRIED திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் நாயகி இவானாவின் கலக்கலான நடனத்தில் வெளிவந்திருக்கும் இப்பாடல் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலக்கலான இஸ் கிஸ் கிஃபா பாடல் இதோ …