தனுஷ் பிறந்தநாளை அதிரடியாக ஆரம்பிக்க கேப்டன் மில்லர் படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு... மிரட்டலான புதிய போஸ்டர் இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸாகும் நேரம் அறிவிப்பு,dhanush in captain miller movie teaser release time announcement | Galatta

தனுஷின் பக்கா ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய போஸ்டர் தற்போது வெளியானது. தனது கடின உழைப்பாலும் அசாத்திய திறமையாலும் படிப்படியாக வளர்ந்து தற்போது இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் உலக சினிமாவிலும் குறிப்பிடப்படும் நடிகராகவும் உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன முன்னதாக தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது திரை பயணத்தில் 50வது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைகிறார். 

இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் இந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை ஆரம்பம் முதலே அதிரடியாக கொண்டாடும் வகையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் நள்ளிரவு சரியாக 12.01AM மணிக்கு வெளியாகும் என தற்போது பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது அந்த போஸ்டர் இதோ…
 

The #CaptainMillerTeaser Rage begins at 12:01AM , JULY 28th 🔥🥁

THE D DAY #CaptainMiller 🤗@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/MAncriQDvh

— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 26, 2023

தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்… ட்ரெண்டாகும் UNSEEN புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்… ட்ரெண்டாகும் UNSEEN புகைப்படம் இதோ!

சினிமா

"சுப்ரமணியபுரத்தில் ஜெய்க்கு நான் செய்த கொடுமையை சுந்தரபாண்டியனில் உணர்ந்தேன்!"- வைரலாகும் சசிக்குமாரின் பேட்டி இதோ!

சுப்ரமணியபுரம் பட க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்... ஸ்பெஷல் வீடியோ இதோ!
சினிமா

சுப்ரமணியபுரம் பட க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்... ஸ்பெஷல் வீடியோ இதோ!