சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜெயிலர் பட மரண மாஸ் ட்ரீட்... ரசிகர்களை கவரும் ஜுஜுபி பாடல் இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட 3வது பாடலான ஜுஜுபி பாடல் வெளியீடு,Super star rajinikanth jailer movie third single jujubee song out now | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலான நடிப்பில் தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் 3வது பாடலான ஜுஜுபி பாடல் தற்போது வெளியானது.  அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் நட்சத்திர நாயகராகவும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படபிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார். இதனையடுத்து மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலான ஜுஜுபி பாடல் தற்போது வெளிவந்துள்ளது. முன்னதாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்களான காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரல் ஹிட்டான நிலையில், தற்போது அடுத்த வைரல் ஹிட்டாக வந்திருக்கும் இந்த ஜுஜுபி பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  ஹுக்கும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுத பிரபல பாடகி தீ பாட வெளிவந்துள்ள அட்டகாசமான அந்த பாடல் இதோ…
 

ரிலீஸுக்கு ரெடியான MSதோனி தயாரிப்பின் முதல் தமிழ் படைப்புஏ... ஹரிஷ் கல்யாணின் LGM பட சென்சார் அறிக்கை இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான MSதோனி தயாரிப்பின் முதல் தமிழ் படைப்புஏ... ஹரிஷ் கல்யாணின் LGM பட சென்சார் அறிக்கை இதோ!

தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்… ட்ரெண்டாகும் UNSEEN புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்… ட்ரெண்டாகும் UNSEEN புகைப்படம் இதோ!

சினிமா

"சுப்ரமணியபுரத்தில் ஜெய்க்கு நான் செய்த கொடுமையை சுந்தரபாண்டியனில் உணர்ந்தேன்!"- வைரலாகும் சசிக்குமாரின் பேட்டி இதோ!