“என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டாதீர்கள்..” சர்ச்சைக்குள்ளான படத்தை கைவிட்ட தயாரிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

சர்ச்சையை ஏற்படுத்திய திப்பு படத்தை கைவிட்ட தயாரிப்பாளர் சந்தீப் சிங் - Sandeep singh shelves tipu sultan movie after receiving threats | Galatta

இந்திய ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட மேரிகோம், அலிகார் சரப்ஜித் மற்றும் பிரதமர் மோடியின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு வெளியான PM நரேந்திர மோடி போன்ற திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சந்தீப் சிங் பாலிவுட் திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர். தற்போது இவர் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கிய தி கேரளா ஸ்டோரி பட இயக்குனர் சுதிப்டோ சென் கூட்டணியில் ஷஹரிஷி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதனிடையே தயாரிப்பாளர் சந்தீப் சிங் சில மாதங்களுக்கு முன்பு மைசூரின் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் வாழ்கையை மையமாக கொண்டு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படம் குறித்து அறிவிப்பை வீடியோவுடன் வெளியிட்ட தயாரிப்பாளர் சந்தீப் சிங் அதனுடன் . “நான் திப்பு சுல்தான் குறித்து உண்மையை படிக்கையில் அதிர்ந்து போனேன். அந்த கதை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி, சுதந்திர வீர சாவர்கராக இருந்தாலும் சரி, மெயின் அடல் ஹுனாக இருந்தாலும் சரி, சிவாஜியாக இருந்தாலும் சரி எனது படங்கள் உண்மையை மட்டுமே குறிக்கும்.மக்களுக்கு திப்பு சுல்தான் கொடுங்கோலன் என்பதை தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் மக்கள் அதை புறக்கணித்துள்ளனர். கடந்து சென்றுள்ளனர். இந்த உண்மையை நான் 70mm ல் காட்ட விரும்புகிறேன். உண்மையிலே அவர் சுல்தான் என்று அழைக்கப்படுவதற்கு கூட தகுதியற்றவர், நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் அவரை நல்லவர், போல காட்டியிருக்கின்றனர். ஆனால் அவருடைய மறுபக்கம் யாருக்கும் தெரியாது. அதனால் வருங்கால சந்ததியினருக்காக அவருடைய இருண்ட  பக்கத்தை என் படத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்.” என்று கூறியிருந்தார் தாயாரிப்பாளர் சந்தீப் சிங். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி கடுமையான எதிர்ப்புகளை பெற்றது.  

 

View this post on Instagram

A post shared by Sandeep Singh (@officialsandipssingh)

‘திப்பு’ என்று அழைக்கப்படும் அந்த படத்தின் அறிவிப்பு வீடியோவில், 8000 கோவில்கள் . 27 தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளது.  4 மில்லியன் இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டு பீப் சாப்பிட வற்புறுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கு மேல் இந்துக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 20 ஆயிரம் பிரமர்கள் வாழ்வியல் அழிக்கப்பட்டுள்ளது” என்று தகவலுடன் வீடியோ வைரலானது. இப்படத்தை இயக்குனர் பவன் ஷர்மா இயக்கவுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இருந்தது. இந்நிலையில் திப்பு சுல்தான் திரைப்படத்தை கைவிட்டு விட்டதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சந்தீப் சிங். இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்

``இந்த திப்பு திரைப்படம் எடுக்க போவதில்லை. என்னையும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு என் சகோதர, சகோதரிகளாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் யாருடைய மனதையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன். எந்தவித நோக்கமும் எனக்கு இல்லை. அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். இந்தியர்களாக நாம் ஒற்றுமையாக இருப்போம். என்றும் மற்றவரை மதிப்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து தயாரிப்பாளர் சந்தீப் சிங் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

The film on Hazrat Tipu Sultan will not be made.

I kindly request my fellow brothers and sister to refrain from threatening or abusing my family, friends and me. I sincerely apologize if I have unintentionally hurt anyone's religious sentiments. It was never my intention to do… pic.twitter.com/zQUuAsxSSK

— Sandeep Singh (@thisissandeeps) July 24, 2023

ஆஸ்கர் விருது வென்ற கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன்.. – இறுதிகட்டத்தை நெருங்கும் ஷங்கரின் இந்தியன் 2.. -  வைரல் பதிவு உள்ளே..
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன்.. – இறுதிகட்டத்தை நெருங்கும் ஷங்கரின் இந்தியன் 2.. - வைரல் பதிவு உள்ளே..

கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer - க்கு கண்டனம்.! சர்ச்சைக்குள்ளான காட்சியை நீக்க வலியுறுத்தி வரும் இந்து அமைப்பினர்.. விவரம் உள்ளே..
சினிமா

கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer - க்கு கண்டனம்.! சர்ச்சைக்குள்ளான காட்சியை நீக்க வலியுறுத்தி வரும் இந்து அமைப்பினர்.. விவரம் உள்ளே..

“சுப்ரமணியபுரம் 2 கதை ரெடி.. ஆனா..” இயக்குனர் சசிகுமார் பகிர்ந்த ருசிகரமான தகவல் – Exclusive interview இதோ..
சினிமா

“சுப்ரமணியபுரம் 2 கதை ரெடி.. ஆனா..” இயக்குனர் சசிகுமார் பகிர்ந்த ருசிகரமான தகவல் – Exclusive interview இதோ..