தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா கடைசியாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்களில் தோன்றினாலும் ரோலக்ஸ் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரவைத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் சூர்யா42 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யா, தயாரித்து நடித்து வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு விருதுகளை குவித்தன.

5 தேசிய விருதுகளை கைப்பற்றிய சூரரைப்போற்று திரைப்படம் 8 ஃபிலிம்பேர் விருதுகளையும் கைப்பற்றியது. இந்நிலையில் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் IMdb-ல் முதல் 250 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Another feather in the cap!#JaiBhim and #SooraraiPottru are among the top 250 movies ranked by @IMDb!

Watch them on @primevideoin now!@Suriya_offl #Jyotika @rajsekarpandian pic.twitter.com/vjx2mmGrdq

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 19, 2022