தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

இவரது ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி netflix தளத்தில் வெளியாகவுள்ளது.தனுஷ் தற்போது செம பிஸியாக grey man படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.கர்ணன் படத்தினை பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

ராஜீஷா விஜயன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு,கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது,இந்த படம் அமேசான் ப்ரைமில் சமீபத்தில் வெளியானது.

தற்போது இந்த படம் எப்படி உருவானது என்பது குறித்த மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பல முக்கிய காட்சிகள் உருவான விதம் குறித்த இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்