கன்னட சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவரான நடிகை சேத்தனா ராஜ் கன்னடத்தில் கீதா மற்றும் டோரேசானி உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை சேத்தனா ராஜ் தற்போது மரணமடைந்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. பெற்றோரிடம் தெரிவிக்காமல் தனது நண்பர்களோடு மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடிகை சேத்தனா ராஜ் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று திங்கட்கிழமை (மே-16) காலை தனியார் மருத்துவமனையில் ஃபேட் ஃப்ரீ அறுவை சிகிச்சைக்கு நடிகை சேத்தனா ராஜ் தன்னை உட்படுத்திக் கொண்டார். இதனையடுத்து மாலையில் நடிகை சேத்தனா ராஜ்-ன் நுரையீரலில் நீர் தேங்க தொடங்கியதால் அவரது நிலைமை கவலைக்கிடமான நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை சேத்தனா ராஜ்-ன் பெற்றோர்கள் தங்களது மகளின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமும் மருத்துவமனையையே காரணம் என புகார் அளித்துள்ளனர். எனவே நடிகை சேத்தனா ராஜ்-ன் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.