இந்திய சினிமாவை பொறுத்த வரை பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்று ஒரு அர்த்தம் உண்டு. அந்த அளவிற்கு இந்திய திரை உலகில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் இயக்குனர் ஷங்கர் முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை தொடங்கினார்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் பல தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் முதல் முறை தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #RC15 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி, ஜெயராம், இயக்குனர் S.J.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய RC15 படத்திற்கு S.தமன் இசையமைக்கிறார். RC15 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ள நிலையில், கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் படக்குழுவினரை தற்போது வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குநர் ஷங்கர் கே ஜி எஃப் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இதோ…