கன்னட திரையுலகில் பொற்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்த உதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்த நடிகை ப்ரணிதா தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தியின் சகுனி, நடிகர் சூர்யாவின் மாஸ், அகர்வாலின் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் மற்றும் நடிகர் ஜெயின் எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக பாலிவுட்டில் ப்ரணிதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. முன்னதாக முன்னணி தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த ஆண்டு(2021) மே மாதம் ப்ரணிதா திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை ப்ரணிதா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் தற்போது நடிகை ப்ரணிதாவின் சீமந்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சீமந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…