இந்திய சினிமாவின் இன்றியமையாத சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்த ஹாலிவுட்டில் வெளிவர உள்ள திரைப்படம் தி க்ரே மேன். அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாகிறது.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் சிறந்த படைப்புகளை தனுஷ் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் 3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, மாரி, விசாரணை, ப.பாண்டி, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அதேபோல் யூடியூபிலும் தனுஷின் பாடல்கள் செய்யாத சாதனைகளே இல்லை என சொல்லலாம். குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகர் 

இந்நிலையில் தனுஷின் வுண்டர்பார் யூடியூப் சேனல் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் இந்தியா வொண்டர் பார் சேனலை மீட்டெடுக்க உதவி செய்து வருவதாகவும் விரைவில் சேனல் மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.